வடமாகாண செயற்பட்டு மகிழ்வோம் போட்டிகளில் யாழ்ப்பாணம் தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த நாவற்குழி மகா வித்தியாலய தரம் – 05 பெண்கள் அணியினர் முதலிடம் பெற்று சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
இப்போட்டிகள் நேற்று (18) கிளி.பூநகரி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன. வடமாகாண ரீதியில் இடம்பெற்ற ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் முதல்முறையாக பங்குபற்றி முதலாம் இடத்தினைப் பெற்று நாவாற்குழி மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
குறித்த போட்டியில் 13 அணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
