கார் ஒன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் காரில் பயணித்த ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (20) காலை பதிவாகியுள்ளது. பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய ஆசிரியர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியர் இன்று காலை பாடசாலைக்கு செல்ல தயாராகி தனது காரினை வீட்டிலிருந்து வெளியே செலுத்திய வேளையில், அது அருகிலிருந்த பள்ளத்தின் ஊடாக பசறை-பிபிலை பிரதான வீதியில் விழுந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
