கடன் வாங்கியவர் பணம் தர மறுத்ததால் பணம் கொடுத்தவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ள சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தனது மகன் காணி வாங்குவதற்காக அனுப்பிய பணத்தில் ஒரு கோடி ரூபாபை ஒரு பெண்ணுக்கு உயிரிழந்தவர் கொடுத்துள்ளார்.
கொடுத்த பணத்தினை பல தடவைகள் கேட்ட போதும் குறித்தபெண் திருப்பிக் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால், மரவிரக்தியடைந்த பணம் கொடுத்த முதியவர் ஏற்கனவே மூன்று தடவைகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முட்பட்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டிருந்தார்.
இரண்டு தடவைகள் அதிக மாத்திரைகளை உண்டு உயிரை மாய்க்க முற்பட்டிருந்தார். மூன்றாவது தடவையாக கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த வேளையில் காப்பாற்றப்பட்டார்.
இந்நிலையில் நேற்று (19) அதிகாலை பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீமூட்டிய நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
