யாழ்ப்பாணம் – அச்சுவேலிப் பகுதியில் 20 வயதுடைய யுவதி ஒருவருக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்கி கூட்டு பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதியின் தாயாரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யுவதிக்கு மதுபானத்தை பருக்கிய இளைஞர் ஒருவர் குறித்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதன் பின்னர் வேறு சில இளைஞர்களும் கூட்டு பாலியல் பலத்காரம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், யுவதி ஒருவராலேயே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு வரை குறித்த யுவதி எந்தவொரு வைத்தியசாலையிலும், அனுமதிக்கப்படாத விடயத்தை அறிந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பணிமனை யுவதியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
