நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு உதவியளிக்க சர்வதேச நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு கநிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெறவுள்ளது.
இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெறும். 48 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன்வசதியின் கீழ் இலங்கைக்கு குறித்த தொகை வழங்கப்படும்.
இந்த மாத ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக இலங்கைக்கு பாரிஸ் கிளப், சீனா, இந்தியா உள்ளிட்ட உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்தது.
இந்தநிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கைக்கு முதல் கட்டமாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
