வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறுபிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மகள் படுகாயம் அடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று (21) இடம்பெற்றுள்ளது. வடமராட்சி – குடத்தனைப் பகுதியில் மணல் ஏற்றிவந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் மகள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் வத்திராயன் தெற்கைச் சேர்ந்த 44 வயதுடைய கணேசலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கு 5 பெண் பிள்ளைகளும் , ஒரு ஆண் மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
