யாழ்.போதனா வைத்தியசாலையின் மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீழ்ந்த மூன்று மாதம் நிரம்பிய கருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்க்குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாகவே சிசுவின் சடலம் வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
