முல்லைத்தீவு – மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது. வீட்டுக்குள் இருந்து மின்சாரத்தினை வெளியில் எடுத்து முற்றத்தில் வெளிச்சம் போடப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என பொலீஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் இல -92 கொல்லவிளாங்குளம், வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுதாஜினி ( 38 ) என்பவரே உயிரிழந்துள்ளார்
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.
