தன்னுடைய அழகு கெட்டுவிடும் என்பதால் ஒருவயதான குழந்தைக்கு தாய்ப்பாலூட்டாமல் விட்ட தாய் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்காக குழந்தையை தாயொருவர் அனுமதித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தை அழுகின்ற போது குறித்த குழந்தையின் இளம் தாய் தன்னுடைய பெருவிரலை வாய்க்குள் விட்டு தடவியபடி இருந்துள்ளார்.
இதனை அவதானித்த தாதியொருவர் ஏன் குழந்தைக்கு பாலூட்டாமல் இருக்கின்றீர்கள் எனக்கேட்ட போது,
குழந்தைக்கு சில மாதங்கள் மட்டுமே தாய்ப்பாலூட்டியதாகவும், பின்னர் புட்டிப்பால் பருக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
தனது அழகு கெட்டுவிடும் என்பதற்காகவே குழந்தைக்கு பாலூட்டாமல் புட்டிப்பால் பருக்கி வருவதாக குறித்த இளம்தாய் தெரிவித்துள்ளார்.
