வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வட்டுகோட்டை யாழ்ப்பாண கல்லூரியினரால் துவிச்சக்கர வண்டி பவணி இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 7:00 மணியளவில் துவிச்சக்கரவண்டி பவணி ஆரம்பமானது. கல்லூரியின் கொடிகளை தாங்கியவண்ணம் கல்லூரியின் ஆண் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது சைக்கிள் பவணியை ஆரம்பித்து கே.கே.எஸ் வீதியினூடாக கல்லூரியின் சகோதரத்துவ பாடசாலையான உடுவில் மகளீர் பாடசாலையை வந்தடைந்து தொடர்ச்சியாக கல்லூரியின் பெண் மாணவர்களையும் இணைத்து கொண்டு மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையை அடைந்து, பின்னர் சண்டிலிப்பாய் சங்கானை சித்தன்கேணியினூடாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினை சென்றடைந்தனர்.
