நாவாந்துறை கலைவாணி விளையாட்டுக்கழகம் நடராசா சிறிஸ்கந்தராசா ஞாபகார்த்தமாக நாடத்தி வந்த
40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் ஊரெழு றோயல் வி.கழகம் சம்பியனாகியது.
இன்று (25) மாலை கலைவாணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஸ் வி.கழகத்தை எதிர்த்து ஊரெழு றோயல் வி.கழகம் மோதியது.
இறுதியில், சென்மேரிஸ் வி.கழகத்தை வெற்றி கொண்டு றோயல் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிகொண்டது.
