மட்டக்களப்பு திறாய்மடு பகுதியில் புகையிரதத்தை நிறுத்தி மக்கள் இன்று (25) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில் இருந்து சென்று கொண்டிருந்த புகையிரதத்தை திறாய்மடு பகுதியில் மக்கள் ஒன்றிணைந்து நிறுத்தியுள்ளதுடன், அவ்விடத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
திறாய்மடு பகுதியில் பல வருட காலமாக புகையிரத தண்டவாளத்தின் குறுக்கே உள்ள வீதியை மக்கள் பயன்படுத்தி வந்திருந்த நிலையில், அந்த புகையிரத கடவையூடான குறுக்கு வீதியை மூடியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
