கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமைக்குட்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு புலம்பெயர் உறவு ஒருவரின் நிதிப்பங்களிப்பின் மூலம் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இவ்வீடுகளை அமைப்பதற்கு கனடா ரொரன்ரோவில் வசிக்கும் தயாபரன் கார்த்திகா நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
குறித்த வீடுகள் கடந்த 18.03.2023 அன்று நிதிப்பங்களிப்பு வழங்கிய தயாபரன் கார்த்திகா அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் சமூக செயற்பாட்டாளர் கார்த்திகா தயாபரன் அவர்களால் கிளிநொச்சிப் பகுதிகளில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
