பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
பளை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது பின்னால் சென்ற கனரகவாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
