நாட்டில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதிய எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும் விநியோகம் தொடர்வதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொழிற்சங்க ஊழியர்களை கடமைக்கு செல்லவிடாமல் தடுத்ததால் எரிபொருள் விநியோகத்தில் வழக்கமான தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
