வவுனியா, நெடுங்கேணி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தமிழர்களின் பராம்பரிய வழிபாட்டு இடமான வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தான் வவுனியா, வெடுக்குநாறி மலைக்கு சென்று நேரடியாக ஆராயவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சேதமாக்கப்பட்ட சிலை மீள் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
