வவுனியா வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலயத்தின் நிர்வாகத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தற்போது நடைபெற்று வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று (30) காலை 10 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயவளாகத்தில் ஆரம்பமாகியிருந்ததுடன் தற்போது தொல்லியல் திணைக்களத்தில் வளாகத்திற்கு நுழைந்து கோசங்களை எழுப்பிய நிலையில் அங்கு பதற்றமான சூழல் தோன்றியுள்ளது.
