கச்சதீவில் இருந்து நெடுந்தீவில் நிலை கொண்டுள்ள கடற்படையினரின் தேவைக்காக மணல் அகழப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கச்சதீவில் உள்ள மணல் திட்டுக்களில் இருந்து கடற்படையினா் மணலை அகழ்ந்து கடற்படை படகுகள் மூலம் நெடுந்தீவுக்கு கொண்டுவருவதாக மக்கள் தெரிவித்தனர்.
கச்சதீவு மண் திட்டுக்களில் அகழப்படும் மணல் நெடுந்தீவிற்கு கொண்டு வரப்படுவதை தாம் நேரடியாக கண்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, ஜனாதிபதி இந்த விடயத்தினை கவனத்தில் எடுத்து துறைசார் அமைச்சர்களுக்கோ அதிகாரிகளுக்கோ இவ்வாறான செய்பாடுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
