கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் – கரம்பகம் பகுதியில் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரம்பகத்தைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இரண்டு வருடங்களுக்கு மேலாக குடும்பத்தை பிரிந்து வாழும் அவர் தோட்டத்தில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் உள்ள குடிசையில் இருந்து கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இன்று (31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
