யாழிலிருந்த கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் யுவதி ஒருவர் மீது அத்துமீறிய குடுமபஸ்தர் ஒருவர் சக பயணிகளால் நையபுடைக்கப்பட்ட பின்னர் இடை நடுவில் இறக்கி விடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குடும்பஸ்தருடன் அமர்ந்து வந்த யுவதி தனது தாய் மற்றும் சகோதரியுடன் கொழும்புக்கு பயணம் செய்துள்ளார். இரு இருக்கைகளிலும் தாயும் சகோதரியும் அமர்ந்திருக்க தனியே இன்னொரு சீற்றில் அமர்ந்திருந்த குடும்பஸ்தர் இருந்த சீற் அருகிலேயே யுவதியும் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில் பஸ் வவுனியா தாண்டிச் சென்று கொண்டிருந்த போது தீடீரென யுவதி பெரும் சத்தமிட்டு குடும்பஸ்தரை தாக்கியுள்ளார்.
இந்த களேபரத்தால் உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டு பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்த முற்பட்ட போதே குடும்பஸ்தரின் லீலை வெளியாகியுள்ளது.
யுவதி நல்ல நித்திரையில் இருந்த சமயம் குடும்ப்ஸ்தர் யுவதியிடம் அத்து மீறியதை அடுத்து திடுக்கிட்டு முழித்த யுவதி குடும்பதரை தாக்கியதாக கூறியுள்ளார்.
சம்பவத்தை அடுத்து பேருந்தை நிறுத்திய சாரதி பஸ்சை பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல போவதாக கூறியுள்ளார்.
எனினும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றால் நேரம் போய் விடும் என அனைத்து பயணிகளும் கூறியதால் குடும்பஸ்தரை அங்கேயே இறக்கிவிட்டு பேருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் தெரியவருகின்றது.
