நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளில் மக்கள் மத்தியில் மிகக்குறைந்த பிரபல்யம் கொண்ட அரசியல்வாதிகளாக ராஜபக்சாக்களே உள்ளது கருத்துக்கணிப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
அரசியல்வாதிகளின் மக்கள் மத்தியிலான பிரபல தன்மை குறித்து சுகாதார கொள்கை நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதற்கமைய, மிகக் குறைந்த பிரபல்யத்தன்மை கொண்ட அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் (73 -மதிப்பெண்கள்), அதற்கு அடுத்த இடத்தில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவும் (மதிப்பெண்கள் 64) உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ச 51 மதிப் எண்களுடனும், மகிந்த ராஜபக்ச -52 மதிப்பெண்களுடனும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
மக்கள் மத்தியில் அதிகம் பிரபல்யத்தன்மை கொண்டவராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்சன்னி பெர்னாண்டோ புள்ளே உள்ளார். அவருக்கு 8 புள்ளிகள் உள்ளன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவிற்கு மக்கள் மத்தியில் சாதகமான நிலைமை உள்ளதுடன் அவரது மதிப்பெண் 1 ஆகக் காட்டப்பட்டுள்ளது
அனுரகுமார திஸாநாயக்க -16 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் -39 புள்ளிகளை பெற்றுள்ளனர்.
