முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் வசிக்கும் குடும்பபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (03) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் 42 வயதுடைய சிறீதர் ஜெனிற்றா என்ற குடும்பபெண்ணே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் கொக்கிளாய் பகுதியில் இருந்து சிலாவத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து அளம்பில் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது மகளுக்கு பூப்புனித நீராட்டுவிழா செய்வதற்கு வெளிநாட்டில் இருந்து சொந்த இடத்திற்கு வந்த நிலையிலேயே இக்கோரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
