மேடம் – கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர். நேற்றைய முயற்சி வெற்றி அடையும் நாள்.
பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும்.
இடபம் – அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். பகைவர் தொல்லை விலகும்.
தொழிலில் உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். நிதி நிலை சீராகும்.
மிதுனம் – முன்னோர்களின் ஆசியால் எடுத்துக் கொண்ட செயலில் நன்மை அடைவீர்கள்.
தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
கடகம் – உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் நாள்.
சிம்மம் – மனக்குழப்பத்திற்கு இடம் அளிக்காதீர்கள். திட்டமிட்டு செயல்படும் செயல் அனைத்தும் வெற்றியாகும். வேலை பளு அதிகரிக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள்.
கன்னி – பணத் தட்டுப்பாட்டின் காரணமாக முயற்சி இழுபறியாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
தொழிலில் எதிர்பார்த்த லாபம் வராது. வரவேண்டிய பணமும் தள்ளிப் போகும்.
துலாம் – எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு வரும். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்.
விருச்சிகம் – உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்வீர். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
தனுசு – திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளி இடத்தில் உங்கள் மதிப்பு உயரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
மகரம் – குடும்பத்தில் ஒருவரால் முயற்சி ஒன்று நிறைவேறும். சேமிப்பில் கவனம் தேவை.
பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். நிதி நிலை சீராகும்.
கும்பம் – திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு தர்ம சங்கடத்திற்கு ஆளாவீர்கள்.
செயலில் தடுமாற்றம் ஏற்படும். கவனக்குறைவால் தொழிலில் கஷ்டத்தை சந்திப்பீர்கள்.
மீனம் – இருப்பிடத்தை மாற்றம் செய்வீர்கள். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
