கசிப்பு வாங்கிவர மறுத்த பிள்ளைகளை தந்தை ஒருவர் வீட்டை விட்டு துரத்திய சம்பவம் ஒன்று இங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது.
பலதடவைகள் பிள்ளைகளைக் கொண்டு குறித்த நபர் கசிப்பு வாங்கி குடித்து வந்துள்ளார். இந்நிலையில் பிள்ளைகள் கசிப்பு வாங்கி வருவதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில், அவர்களுடைய பாடசாலை புத்தகங்கள் மற்றும் சீருடையுடன் வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், குறித்த நபர் இங்கிரிய பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
