மேடம் – எதிர்ப்புகள் விலகும். சுறு சுறுப்புடன் செயல்பட்டு நினைத்ததில் வெற்றி காண்பீர்.
எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் ஆதரவுடன் ஒரு செயலில் முன்னேற்றம் அடைவீர்கள்.
இடபம் – குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.
பெரியோர் வழியே நல்ல செய்தி வரும். குழப்பம் விலகும். நன்மையான நாள்
மிதுனம் – எதிர்பார்ப்பு நிறைவேறி உற்சாகமுடன் செயல் ஒன்றில் லாபம் காண்பீர்கள். நண்பர்கள் ஆதரவுடன் செயல்பட்டு முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்.
கடகம் – விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். சகோதர வகையில் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரம் செய்யும் இடத்தில் சில மாற்றங்களை செய்வீர். ஆதாயம் அதிகரிக்கும்.
சிம்மம் – மனதில் தெளிவு பிறக்கும். தடைபட்ட செயல் நிறைவேறும். திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். எதிர்பாராத வருமானம் ஏற்படும்.
கன்னி – மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும். ஆதாயமான நாள்.
துலாம் – குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். வரவு செலவில் எச்சரிக்கை தேவை. தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
விருச்சிகம் – வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். நிதிநிலை உயரும். குடும்ப நலனுக்காக சில முயற்சிகளை மேற்கொள்வீர். வரவேண்டிய பணம் வரும்.
தனுசு – தெய்வ வழிபாட்டில் உங்கள் மனம் செல்லும். வியாபாரத்தில் மாற்றம் செய்ய திட்டமிடுவீர். வியாபாரத்தை விரிவு செய்ய புதிய முதலீடு செய்வீர். ஒரு எண்ணம் நிறைவேறும்.
மகரம் – இரண்டு நாட்களாக இருந்து வந்த சங்கடம் விலகும். பணவரவு மகிழ்ச்சி தரும்.
நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று முடிவிற்கு வரும். நன்மையான நாள்.
கும்பம் – சிந்தித்து செயல்படுவதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிரிகளால் சில சங்கடம் தோன்றும். அமைதி காக்க வேண்டிய நாள். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். நிதானம் அவசியம்.
மீனம் – உங்கள் முயற்சி நிறைவேறும். நண்பர்கள் துணையுடன் ஒரு வேலையை செய்து முடிப்பீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை நீங்கும்.
