பல மாணவர்களை உயர்தர கற்றல் நோக்கி நகர்த்துவதோடு, மாணவர்களின் தரமே தாரக மந்திரமாக கொண்டு தென்மராட்சியின் தனித்துவம் மிக்க கல்வி நிறுவனமாக விளங்கும் சாகவச்சேரி அன்பொளி கல்வி நிறுவனத்தின் தரம் 11 மாணவர்களை மகிழ்வோடு பரீட்சைக்கு அனுப்பி வைக்கும் உள ஊக்குவிப்போடு கூடிய விருந்துபசார நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
அன்பொளி கல்வி நிலைய இயக்குநர் சி.செல்வபாஸ்கர் தலைமையில் அன்பொளிகல்வி நிலையத்தில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்நிகழ்விற்கு விசேட விருந்தினராக இக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று தற்போது கொழும்பு ஶ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவனாக கல்வி பயிலும் கி.சுதர்சன் கலந்து சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வு அன்பொளிகல்வி நிலையத்தில் இவ்வருடம் தரம் -10 இல் கல்வி கற்கும் மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு கல்வி நிலைய ஆசிரியர்களின் நெறியாள்கையில் சிறப்பாக இடம்பெற்றது.
இவ்நிகழ்வில் மாணவர்களின் திறமைகளுக்கு களம் அமைக்கும் நிகழ்வுகளும் மற்றும் ஆசிரியர்களின் மாணவர்களுக்கான ஊக்கமளிப்புக்கான நிகழ்வுகளும் இடம்பெற்று இறுதியில் ஆசிரிய பெருந்தகைகளால் மாணவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டு பரீட்சையில் சிறப்புபெறுபேறு பெற்று உயர்தர கல்வியைத் தொடர வேண்டுமென வாழ்த்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
