யாழ்ப்பாணப் பிரதேச மக்கள் வெற்றிலைக்குப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பில் புற்றுநோய்க் கூறுகள் அதிகளவு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டலில் இறுதியாண்டு மாணவன் ஒருவன் நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு சுகாதார அமைச்சால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில், வாய்ப் புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அதுதொடர்பான மரணங்கள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
அதற்கான காரணங்கள அறியும் நோக்கில் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து பெறப்பட்ட சுண்ணாம்பு மாதிரிகள் ஆய்வுப்
பரிசோதனைக்காக அரசாங்கத்தின் பகுப் பாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டது.
அரசின் பகுப்பாய்வில் சுண்ணாம்பு மாதிரிகளில் புற்றுநோயை உண்டாகும் ‘ரோடமைன் பி’ என்ற கூறு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ். மாவட்ட மக்கள் பயன்படுத்தும் சுண்ணாம்பிலேயே இந்தக் கூறு அதிகளவில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு அவசியம் எனவும் இந்தச் சுண்ணாம்பை உடனடியாகச் சந்தைப் பயன்பாட்டிலிருந்து அகற்றுவது அவசியம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
