புகையிரதத்துடன் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இன்று (07) பதிவாகியுள்ளது.
அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி இன்று பிற்பகல் பயணித்த புகையிரதத்தில் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
வாதுவ, ரத்நாயக்க பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய குருகே நீல் பெரேரா என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
