யாழ்ப்பாண சிறைச்சாலையில் கைதிகளின் பாவணைக்காக நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ் நூலகம் நாளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.
இவ் நூலகம் யாழ்.பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இவ் நூலகம் ஏப்ரல் 8 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
ஏறத்தாழ 2500 புத்தகங்களை கொண்ட நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்படவுள்ளது.
