திருகோணமலை கந்தளாய் – அக்போபுர பகுதியில் புகையிரதம் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (07) பதிவாகியுள்ளது. கல் ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதம் கித்துல்உதுவ பகுதியில் புகையிரதத்தின் பெட்டியொன்று தடம் புரண்டுள்ளது.
இவ்விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
