பங்காளதேஷ் – டாக்கா பந்தர்பானில் உள்ள ரோவாங்க்சாரி உபாசிலாவில் நேற்று (07) இரவு இரு ஆயுத பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி (ஜனநாயக) மற்றும் குகி- சின் தேசிய முன்னணியின் இராணுவப் பிரிவான குக்கி- சின் தேசிய இராணுவம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலீஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
