மருகமனுக்கும், மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில், மருமகனால் தாக்கப்பட்ட மாமியார் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (08) பிற்பகல் கணவன் மற்றும் மருமகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த பெண் மருமகனால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த குறித்த பெண் மீட்கப்பட்டு பொல்பித்திகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.
