யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 14 வயதுச் சிறுமியை கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள். போதைப் பொருள் பாவணைக்கு அடிமையாகிய 19 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களே சிறுமியை பலாத்காரம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை தொடர்ச்சியாக வன்புனர்வுக்கு உட்படுத்தியமை சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
