கடந்த வருடத்தை விட இந்த வருடம் புத்தாண்டு மிகவும் சிறப்பானதாக அமைந்திருப்பதாகவும், அடுத்த வருடத்தை இன்னும் சிறப்பாக மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு முழு இலங்கை மக்களுக்கும் இருப்பதாகவும் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட 26 புதிய பஸ்களை கண்டி மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்குறித்த கருத்தை வெளியிட்டார்.
