அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.என்.எஸ் என்ற போக்குவரத்துக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை நேற்று (08) வந்தடைந்துள்ளது.
இராணு வீரர்கள், இராணுவ உபகரணங்கள், உள் திரையரங்கு மற்றும் போக்குவரத்தை வழங்கும் திறன்கொண்ட குறித்த கப்பல் சராசரி வேகம் மணிக்கு 25 மைல்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் எரிபொருளை நிரப்புவதற்காக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
