மேடம் – இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சிகள் இன்று மதியத்திற்கு மேல் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
இடபம் – எதிர்பாராத பிரச்னைகளை இன்று சந்திப்பீர்கள். சகபணியாளருடன் வாக்குவாதம் வேண்டாம். புதிய முயற்சிகள் இன்று கை கொடுக்காமல் போகும். உங்கள் திறமைக்கு சவாலான நாள்.
மிதுனம் – தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு செயலில் முன்னேற்றம் காண்பீர்கள். முயற்சிகள் வெற்றியாகும்.
வியாபாரத்தின் சூட்சுமங்கள் புலப்படும். லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள்.
கடகம் – பொருளாதாரத் தடைகள் விலகும். அரசு வழியிலான முயற்சியில் ஆதாயம் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் செயல்களுக்கு மதிப்பு ஏற்படும். எதிர்பாராத வரவு உண்டாகும்.
சிம்மம் – எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து லாபம் தோன்றும். குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர்கள். தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும்.
கன்னி – தாய்வழி உறவுகள் வழியே ஆதாயம் அடைவீர்கள். முயற்சி ஒன்று அனுகூலமாகும்.
வரன் தேடி வந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் செயல் வெற்றியாகும்.
துலாம் – குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர்கள். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நிதிநிலையில் உயர்வு உண்டாகும்.
விருச்சிகம் – விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
தனுசு – மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் பிரச்னைகளை மற்றவரிடம் கொண்டு செல்ல வேண்டாம்.
உங்களை சீண்டிப் பார்க்க சிலர் முயற்சிப்பர். எந்த நிலையிலும் அமைதியை இழக்காதீர்கள்.
மகரம் – பல வழியிலும் இன்று செலவுகள் உண்டாகும். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும். வருவாயைவிட செலவுகள் அதிகரிக்கும். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியை ஏற்படுத்துவர்.
கும்பம் – உங்கள் தனித்தன்மையால் மற்றவர் விருப்பத்திற்கு ஆளாவீர்கள். செல்வாக்கு உயரும்.
தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். நண்பர் உதவியால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.
மீனம் – வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் எண்ணம் இன்று நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
