வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் தன்னால் வைக்கப்பட்ட புத்தர் சிலையைக் காணவில்லை என தமிழர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் நேற்று (10) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
வவுனியா – செட்டிக்குளம் பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக கடந்த 9 ஆம் திகதி காணியொன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது. குறித்த சிலை அன்றைய தினம் மாலையே அகற்றப்பட்டிருந்தது. குறித்த சிலை மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த சிலையை அரச காணியில் தானே வைத்ததாகவும், அதை காணவில்லை எனவும் பொலிஸில் தமிழர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த நபர் சிங்களப்பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறைப்பாட்டின் அடிப்படையில் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
