மேடம் – உங்கள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும். குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள். உங்களின் எண்ணம் பலிதமாகும். முயற்சியில் சாதகமான நிலை உண்டாகும்.
இடபம் – வருவாயில் இருந்த தடைகள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். நினைத்ததை செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல் வெற்றியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம் – முயற்சியில் சங்கடம் உண்டானாலும், இறுதியில் வெற்றி அடைவீர்கள். எதிர்ப்புகள் உண்டாகி உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். நிதானம் தேவை.
கடகம் – இன்று கோயிலுக்கு செல்வீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
சிம்மம் – முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்னை ஒன்றுக்கு முடிவு காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.
கன்னி – முயற்சிகள் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். நிதிநிலை உயரும். குடும்பத்தினர் ஆதரவுடன் முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.
துலாம் – உங்கள் பலம் இன்று மற்றவர்களுக்கு தெரியவரும். செயல்களில் ஆதாயம் உண்டாகும். மற்றவர்கள் ஆலோசனைக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால், முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
விருச்சிகம் – துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். யோகமான நாள்.
தனுசு – இன்று கோயிலுக்கு செல்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
உங்கள் செயலில் சாதகமான நிலை உண்டாகும். நண்பர்கள் உதவியால் ஆதாயம் காண்பீர்கள்.
மகரம் – குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கும்பம் – குடும்பத்திற்காக செலவுகள் செய்வீர்கள். எதிர்பார்த்தவற்றில் தடையும் தாமதமும் உண்டாகும்.
ஆடம்பர செலவுகள் செய்வீர்கள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
மீனம் – நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் தேடி வருவார்கள்.
