தென்மராட்சி மெகா பிறீமியர் லீக் ஆரம்ப நிகழ்வின் போது அனைவரின் மனதினையும் உருக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இன்று (15) பதிவாகியது.
அண்மையில் மரணமடைந்த தென்மராட்சி பிரதேச சிறந்த விளையாட்டு வீரனும், தென்மராட்சி கிரிக்கெட் வீரர்களின் சக வீரனுமாகிய பிரதீப் அவர்களின் உருவச்சிலை வைக்கப்பட்டு மலர்தூபி சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் தென்மராட்சியின் வீரர்கள், நண்பர்கள் எனப்பலர் கலந்து கொண்டதுடன், அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் சொரிந்து தங்களுடைய நண்பனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்தனர்.
ஒரு துடுப்பாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போது தங்களோடு ஒன்றாக பல மைதானங்களில் களம்கண்ட நண்பனின் திருவுருவத்தை மீண்டும் அனைவரின் மனக்கண்முன் கொண்டுவந்த செயற்பாடானது அனைவரின் மனங்களையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
