யாழ்பப்பாணம் – ஊரெழு மேற்கு புண்ணியப்புலம் நாகதம்பிரான் திருக்கோவில் வருடாந்த அலங்கார உற்சவம் 13.04.2023 அன்று ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
அவ்வகையில், இன்று (15) மூன்றாம் நாள் பூசைகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு நாகதம்பிரானின் அருளாசிகளை பெற்றுக்கொண்டனர்.
அலங்கார உற்சவம் உற்சவகுரு சிவாச்சாரிய இளஞ்சுடர் சிவஶ்ரீ.ந.கஜனேசக்குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
