யாழ்.பண்ணை சுற்று வட்டத்தில் பாரம்பரிய உணவு திருவிழா இன்று (15) வெகு சிறப்பாக ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
தமிழ் மக்களிடையே அருகிவரும் பாரம்பரிய உணவுப்பழக்கத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டச்செயலகத்தால் நடாத்தப்படும் யாழ் பாரம்பரிய உணவுத்திருவிழா இன்று ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் , பண்ணை சுற்றுவட்டாரத்தில் 40 இற்கும் மேற்பட்ட கூடாரங்களில், கூழ் வகைகள் பலகாரங்கள் தீன்பண்டங்கள் விழாக்கால விசேட உணவுவகைகள் மற்றும் பற்பல சுவையான உணவுவகைகள் போன்ற உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
