நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கொக்குவில் பகுதியில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
