யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மன் சிலையினை அகற்ற அனுமதி கோரி யாழ்ப்பாண பொலிசாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வழக்கு இன்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
இந்து அமைப்புகள் சார்பில் பிரபல சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் பிரசன்னம் ஆகியுள்ளனர். சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீகாந்தா, திருக்குமரன் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளனர்.
