உரும்பிராய் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு உரும்பிராய் மேம்பாட்டு ஒன்றியத்தால் ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான மருந்துகள் இன்று (18) வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.கோபி அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த மருந்துப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில், உரும்பிராய் மேம்பாடு ஒன்றியத் தலைவர் வைத்தியர் வே.கணேசவேல், ஒன்றியத்தின் பொருளளார் தினேஷ், செயலாளர் செல்வி தட்ஷா, உப செயலாளர் பாணு உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்களும் மற்றும் புலம்பெயர் வாழ் சமூக ஆர்வலர்களான சோதிலிங்கம் (கனடா), க.தர்மசிங்கம் (லண்டன்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த மருந்துப்பொருட்களை வழங்குவதற்கான நிதி அனுசரணையை கனடா நாட்டில் வசிக்கும் ச.கிருபா அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
