யாழ்ப்பாணத்தில் கோழி இறைச்சியின் விலையானது ஒவ்வொரு இடத்திற்கு, ஒவ்வொரு இறைச்சிக்கடைக்கு ஏற்றால் போல் மாறுபட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஒரு கிலோ புறோயிலர் இறைச்சியின் விலை 1400 இல் இருந்து 1750 வரை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அதிகரித்த பொருட்களின் விலை மத்தியிலும், இவ்வவறான நிலையில்லாத விலைத்தளம்பல்களால் ஏழை மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
யாழ்.மாவட்டத்தில் பல மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் கோழி இறைச்சியின் நிச்சயமற்ற விலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
