உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக இன்று(21) விசேட அஞ்சலி நிகழ்வும் திருப்பலி ஆராதனையும் இடம்பெற்றது.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியின் இரு மருங்கிலும் பெருந்திரளான மக்களும் திரண்டு, அஞ்சலி செலுத்தியதோடு, தாக்குலுக்கு நீதி வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு இலக்கான, கொச்சிக்கடை தேவாலய பகுதியில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
அதேநேரம், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திலிருந்து நேற்று மாலை ஆரம்பமாகியிருந்த அமைதிப் பேரணியும் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை வந்தடைந்துள்ளது.
