தென்னிந்திய பிரபல நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஜனனி ஐயர் இன்று (21) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். திருநெல்வேலியில் அமைந்துள்ள வணிக நிலையமொன்றின் திறப்பு விழா நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு முதன்முறயாக வந்த ஜனனியுடன் செல்ஃபி எடுப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
