யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மாடுகளை திருடிஇறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, அளவெட்டி, தெல்லிப்பழை, வடமராட்சி உள்ளிட்ட பிரதேசங்களில் 25 இற்கும் மேற்பட்ட மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
5 பேர் கொண்ட கும்பல், பகலில் மோட்டார் சைக்கிளில் சென்று மாடுகளை நோட்டுமிட்டு வந்து இரவில் வாகனத்தில் சென்று இரும்புச் சங்கிலி போட்டு மாடுகளை ஏற்றி வந்து கப்பூது வெளியில் வைத்து இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
