நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு கோரிக்கை வழங்கியுள்ளார்.
இப்படுகொலை சம்பவம் தொடர்பில்
வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு உரையாற்றயபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இப்படுகொலையின் உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் போக்க வேண்டுமென்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
