மேடம் – கவனமுடன் செயல்படுவதால் இழுபறியாக இருந்த ஒரு முயற்சி வெற்றிபெறும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இடபம் – எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
நண்பர்கள் துணையுடன் ஒரு பிரச்னைக்கு முடிவு கட்டுவீர்கள். புதிய முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம் – குடும்ப சொத்து விவகாரம் பற்றி உறவினர்களிடம் ஆலோசிப்பீர்கள். சிக்கல் தீரும்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். பெரியோரின் ஆசி நன்மை தரும்.
கடகம் – திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர்கள். திருப்பு முனையான நாள்.
குடும்பத்தினர் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.
சிம்மம் – வேகமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த இலாபம் உண்டு.
வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை சரி செய்வீர். வருமானம் அதிகரிக்கும்.
கன்னி – குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். நிதிநிலை குறித்த எண்ணம் மேலோங்கும். உங்கள் வாக்கு ஒருவருக்கு பலித்தமாகும்.
துலாம் – உங்கள் அணுகுமுறையால் நீண்ட நாள் பிரச்சினை இன்று தீர்வுக்கு வரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள்.
விருச்சிகம் – வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர்கள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.
வருமானத்தில் தடை உண்டாகும். புதிய முயற்சி எதுவும் இன்று வேண்டாம்.
தனுசு – நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று உங்களைத்தேடி வரும். தொழிலில் இலாபகரமான நாள். உங்கள் செயல்களில் இன்று விவேகம் இருக்கும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள்.
மகரம் – வியாபாரத்தை விருத்தி செய்வதற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள். முயற்சி வெற்றி பெறும். முதலீடுகள் செய்திருந்தவற்றில் ஆதாயமான நிலை ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம் – தந்தை வழி உறவுகள் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
உங்கள் எண்ணங்களில் ஒன்று நிறைவேறும். விரும்பியதை அடைந்து மகிழ்வீர்கள். சங்கடம் விலகும்.
மீனம் – வெளியூர் பயணங்களால் லாபம் உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பும் விருப்பமும் நிறைவேறும். சங்கடம் விலகும் என்றாலும் உடல் நலனில் அக்கறை தேவை.
